வெள்ளிங்கிரி மலை பயணம் உகந்த நாட்கள் மலையேற ஏற அனுமதி காலம் சிவராத்திரி முதல் மே மாதம் கடைசி வரை வெள்ளிங்கிரி மலை பயணம் உகந்த நாட்கள்.மலையிலும் பெண்களுக்குக் கட்டுப்பாடுகள் உள்ளன. பன்னிரண்டு வயதில் இருந்து ஜம்பது வயது வரை உள்ள பெண்கள் இந்த மலையில் ஏற அனுமதி இல்லை. அங்கு யாரும் யாரையும் போகக் கூடாது என்று தடுப்பது இல்லை. ஆனாலும் காலகாலமாய்த் தொடரும் சம்பிரதாயம் இது. மீறி ஏறும் பெண்கள் பல இன்னல்களுக்கு ஆளாகிப் பாதியில் திரும்பி வந்ததாகச் செவி வழிக்கதைகள் கூறுகின்றன.

தென் கைலாயம் வெள்ளிங்கிரி ஆண்டவர் மலையின் வரலாறு

வெள்ளியங்கிரி ஆண்டவர் மலை

எல்லாம் வல்ல பரம்பொருள் சுயம்புவாக எழுந்தருளி அருள் பாளித்துக்கொண்டிருக்கும் தென் கைலாயம் வெள்ளியங்கிரி. முன்னொரு யுகத்தில் பரமேஸ்வரன், கன்னியாகுமாரி தேவியை மணம் புரிவதற்காக வந்தபொழுது தாமதம் காரணமாக அம்மையை மணம் புரிய இயலாமல் போனது. அவ்வேளையில் மிகவும் மனமுடைந்த மகாதேவன், காடு மலைகளை கடந்து விரக்தியில் தனிமையை வேண்டி சென்றுகொண்டே இருந்தார். அப்போது அவர் ஓர் மலையின் உச்சியை அடைந்து, அமர்ந்து தியானத்தில் ஆழ்ந்தார். பின்பு பல நாட்கள் கழிந்து மனம் தெளிவாகி லகுவடைந்து கைலாயம் திரும்பினார். அவ்விடமே தென் கைலயமானது. அதுவே நமது வெள்ளியங்கிரி ஆண்டவன் சுயம்புவாக குடிகொண்டுள்ள வெள்ளியங்கிரி மலையாகப்பெற்றது. பரம்பொருளே மனஷாந்தி அடைத்த அவ்விடத்தில் பின்பு பல யுகங்களாக பற்பல யோகிகள், முனிவர்கள், ரிஷிமார்கள் என பலரும் தவிமிருந்து மனோ அமைதியை மட்டுமின்றி எண்ணற்ற சக்திகளையும் அடையப்பெற்றனர். நம் வாழ்வின் முக்திக்கு அருள் செய்து கைலை இறைவனின் பதம் அடைய வழி சொல்லும் இந்த புண்ணிய மலையை நோக்கி இன்றும் பலகோடி மக்கள் யாத்திரை வந்த வண்ணமே உள்ளனர். எனினும் இந்த யாத்திரையின் அனுமதியும் வெற்றியும் சிவனின் கையில் மட்டுமே உள்ளது.

வெள்ளியங்கிரி ஆண்டவர் மலை

"தென் கைலாயம்" வெள்ளிங்கிரி ஆண்டவர் மலையின் வரலாறு
பரத கண்டத்திலே கொங்கு நாட்டு கோயம்முத்தூரிளிருந்து சுமார் 30 KM தொலைவில் உள்ள ஓர் அடர்ந்த மலை பிரதேசம்.

முன்னொரு யுகத்தில் பரமேஸ்வரன், கன்னியாகுமாரி தேவியை மணம் புரிவதற்காக வந்தபொழுது தாமதம் காரணமாக அம்மையை மணம் புரிய இயலாமல் போனது. அவ்வேளையில் மிகவும் மனமுடைந்த மகாதேவன், காடு மலைகளை கடந்து விரக்தியில் தனிமையை வேண்டி சென்றுகொண்டே இருந்தார். அப்போது அவர் ஓர் மலையின் உச்சியை அடைந்து, அமர்ந்து தியானத்தில் ஆழ்ந்தார். பின்பு பல நாட்கள் கழிந்து மனம் தெளிவாகி லகுவடைந்து கைலாயம் திரும்பினார். அவ்விடமே தென் கைலயமானது. அதுவே நமது வெள்ளியங்கிரி ஆண்டவன் சுயம்புவாக குடிகொண்டுள்ள வெள்ளியங்கிரி மலையாகப்பெற்றது. பரம்பொருளே மனஷாந்தி அடைத்த அவ்விடத்தில் பின்பு பல யுகங்களாக பற்பல யோகிகள், முனிவர்கள், ரிஷிமார்கள் என பலரும் தவிமிருந்து மனோ அமைதியை மட்டுமின்றி எண்ணற்ற சக்திகளையும் அடையப்பெற்றனர். நம் வாழ்வின் முக்திக்கு அருள் செய்து கைலை இறைவனின் பதம் அடைய வழி சொல்லும் இந்த புண்ணிய மலையை நோக்கி இன்றும் பலகோடி மக்கள் யாத்திரை வந்த வண்ணமே உள்ளனர். எனினும் இந்த யாத்திரையின் அனுமதியும் வெற்றியும் சிவனின் கையில் மட்டுமே உள்ளது.

இது மலையல்ல, ஆலயம்

அற்புதமான பல உயிர்கள், கடவுளும் பொறாமை கொள்ளக்கூடிய வகையில் வாழ்ந்தவர்கள், அத்தனை மாண்புடன் அருளுடன் இங்கு வாழ்ந்தவர்கள் இம்மலைகளில் தன் பாதங்களைப் பதித்திருக்கின்றனர். தாங்கள் அறிந்தவற்றை எல்லாம் இம்மலைகள் உள்வாங்கிக்கொள்ளும் வண்ணம் செயல் புரிந்திருக்கின்றனர். அவர்களது ஞானம் தொலைந்து போகாமல் இருக்குமே! இந்த மலையில் என் குரு தனது பாதங்களைப் பதித்திருக்கிறார். தன் உடலினையும் நீப்பதற்கு இம்மலைகளையே தேர்வு செய்தார். அதனால், எனக்கும் இங்குள்ள பிறருக்கும், இது வெறும் மலையல்ல, ஆலயம். நிறைய உன்னதங்களை உள்ளடக்கியதாக இந்த மலை உள்ளது. தியானலிங்கத்தை பிரதிஷ்டை செய்யக்கூடிய வழிமுறை எனக்கு இங்கிருந்து நிரம்பக் கிடைத்தது.

கைலாயம் என்பது சிவனின்

கைலாயம் என்பது சிவனின் யோக உறைவிடமாக இருக்கின்றது என்பதை விட சிவன் கைலாயமாக காட்சி தருகிறார் என்பது உண்மை. அது பல யோகிகளின் ஞானப்புதயலாகவும் இந்து மத புண்ணிய ஸ்தலமாகவும் இருக்கின்றது. மேலும், வழக்கில் நாம் கைலாயம், மத்திய கைலாயம் மற்றும் தென் கைலாயம் என்றும் கொண்டுள்ளோம். இதில், "கைலாயம்" அனைவரும் அறிந்த இமய மலையில் இருக்கின்றது. மேலும், "மத்திய கைலாயம்" திபத்தில் உள்ளது.

வெள்ளியங்கிரி நமது உடம்பின் ஏழுமலை சக்கரங்களின் தத்துவமாக அமைந்துள்ளது.

முதல் மலை

மூலாதாரம்

வெள்ளிவினாயகர் சன்னதி

இரண்டாவது மலை

ச்வதிஷ்ட்டானம்

பாம்பாட்டி சுனை

மூன்றாவது மலை

மணிப்புரகம்

அக்னி தத்துவம், கை தட்டி சுனை

நான்காவது மலை

அனாகதம்

சித்தர் ஒட்டர் சமாதி

ஐந்தாவது மலை

விஷுக்த்தி

பீமன் களியுருண்டை மலை

ஆறாவது மலை

அக்யா

செய்திழை குகை, ஆண்டி சுனை

ஏழாவது மலை

சஹாஸ்ரானம்

சுயம்பு வெள்ளியங்கிரி லிங்கம்