தென் கைலாயம் வெள்ளியங்கிரி மலையின் ஸ்தல வரலாறு
சர்வம் சிவமயமாக விளங்கும் பிரபஞ்சத்தில் உத்திர கயிலாயம் சூட்சம நி்லையி்ல் அமைந்துள்ளது. மத்திய கயிலாயம் திபெத்தில் உள்ளது. தட்சிண கயிலாயம் வெள்ளியங்கிரி மலையாகும். இதனால் தென்கயிலாயம் என்றும் அழைக்கப்படுகிறது. சப்தரிஷிகளில் ஒருவரான சித்தர் அகத்திய முனி தவம்புரிந்த மலையாகும். வெள்ளியங்கிரி, அகத்திய பரம்பரையில் வரும் ஞானியர் அனைவருக்கும் வழிபாட்டுத்தலமாக விளங்குகிறது. ஆதி சங்கரர் வழிபட்ட இடமாகவும் போற்றப்படுகிறது. சிவபெருமானே வந்து தவம் புரிந்த இடமென்றும், சித்தர்கள், யோகிகள், ஞானிகள் பலரும் காலங்காலமாய் தவம்புரிந்தும், வாழ்ந்தும்,சூட்சுமத்தில் இயங்கியும்வருவதால் இந்த மலை சிவரூபமாகும், தவரூபமாகவும் திகழ்கிறது. மகாயோகி பழனி சுவாமிகள், சிவயோகியார், சத்குரு ஸ்ரீபிரம்மா, அகோரி விமலானந்தா, அழுக்கு சாமியார், சௌந்திரபாண்டி சாமியார், காலாத்ரி சாமியார், மைசூர் சாமியார், எட்டிகொட்ட சாமியார், மிளகாய் சாமியார், மாரிமுத்து முதலியார், இராமானந்த பரதேசி ஆகியோர் உலவி மறைந்த புண்ணிய பூமி வெள்ளியங்கிரி மலையாகும். வெள்ளியங்கிரி மலை மீது மற்றும் மலை அடிவாரத்தில் இருக்கும் சிவன் கோவில்கள் 3000 ஆண்டுகளுக்கு மேல் பழமையான கோவில்களாக கருதப்படுகின்றன. இங்கிருக்கும் சிவபெருமான் “வெள்ளியங்கிரி ஆண்டவர்” என்றும் அம்பாள் “மனோன்மணி” என்றும் அழைக்கப்படுகிறார்கள். பன்னெடுங்காலமாக சித்தர்கள் விரும்பி வழிபடும் கோவிலாக இது இருந்திருக்கிறது. புராணங்களின் படி பஞ்ச பாண்டவர்களில் ஒருவனான அர்ஜுனன் இப்பகுதிக்கு வந்த போது சிவபெருமான் வேடன் ரூபத்தில் தோன்றி, அர்ஜுனனுடன் விளையாட்டாக போர் புரிந்தார். இறுதியில் தனது உண்மை வடிவத்தில் தோன்றிய சிவபெருமானை வணங்கிய அர்ஜுனனுக்கு, தனது பாசுபத ஆயுதத்தை சிவபெருமான் அளித்து ஆசிர்வதித்தார். இங்கிருக்கும் ஏழு மலைகளும் உடலில் இருக்கும் “ஏழு யோக சக்கரங்களை” குறிப்பதாக கூறுகிறார்கள். இமய மலையில் இருக்கும் கயிலாய மலைக்கு யாத்திரை போக முடியாதவர்கள், “தென்கயிலாயம்” என போற்றப்படும் இந்த வெள்ளியங்கிரி மலையாத்திரை செய்வதால் கயிலாய மலைக்கு சென்ற பலனை அடைவார்கள் என சித்தர்கள் கூறியிருக்கின்றனர். இந்த மலையில் இருக்கும் ஆண்டி சுனை தென்கயிலாயத்தின் “மானசரோவர்” என்றழைக்கப்படுகிறது. Forums.
மிகவும் சக்தி வாய்ந்த புண்ணியத் தலம் சுயம்பு லிங்கங்களான அக்னி, வாயு, நீர், நிலம், ஆகாயம் என பஞ்ச பூதங்களும் ஒருங்கே அமையப்பெற்ற பஞ்ச பூத ஸ்தலமாக விளங்குகிறது இறைவன் பஞ்சலிங்கேசனாகவும் இங்கு ஆறடி அகலமுள்ள சிறிய குகையில் சிவன் பஞ்ச லிங்கங்களாக அருள்பாலிக்கிறார் தென் கைலாயம் வெள்ளியங்கிரி ஆண்டவர் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலித்து வருகிறார்.தென் கைலாயம் வெள்ளியங்கிரி மலை வரலாறு, வெள்ளியங்கிரி மலை வரலாறு, வெள்ளியங்கிரி ஆண்டவர் மலைகோவில் வரலாறு, வெள்ளியங்கிரி ஏழாவது மலை வரலாறு
more infoஏழு மலைகளின் தத்துவம்:- வெள்ளியங்கிரியின் நாம் பயணிக்க இருக்கும் இந்த ஏழு மலைகளின் தத்துவம் என்னவென்றால், கீழே உள்ள முதல் மலை நம் உடலின் மூலாதார சக்ரமாகவும், இரண்டாவது மலை ச்வாதிஷ்ட்டானம், மூன்றாவது மலை மணிப்பூரகம், நான்காவது அனாகதம், ஐந்தாவது விஷுக்த்தி, ஆறாவது ஆக்ஞா மற்றும் ஏழாவது மலை சஹாஸ்ரானத்தையும் பறைசாற்றும்.இவ்வாராக இந்த தத்துவம் நமது மோட்ச வாழ்விற்க்கு வழி காட்டும் தியானமுறையையும் நமக்கு நினைவூட்டும் விதமாக அமையப்பெற்றது.
more info